Monday, March 18, 2013

தாயக விடுதலை வேண்டி தமிழக முகாம் மக்களின் மெளன ஊர்வலம்...

மெளன ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள்
18.3.2013 இன்று காலை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் தமது தாயக விடுதலைக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் , இன விடுதலைக்காக தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடத்தும் மாணவர்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தும் மெளன ஊர்வலம் அகதி முகாமில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையிலான சாலைகளில் நடத்தப்பட்டது, இதில் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் இருந்து 1250 கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டு மெளன ஊர்வலம் வந்தனர், ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியினை மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் வழங்கியிருந்தனர், முகாம் மக்கள் தமது கோரிக்கையை முன்னிறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.....ஊர்வலம் குறித்து கருத்து தெரிவித்த முகாம் மக்கள் குழு , எமது தமிழின விடுதலைக்காக இன்று தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள் நன்ரி என்னும் வார்த்தைகள் மட்டும் கூறி முடித்து விட முடியாதவை, அவர்களது குரலுக்கு வலுச்சேர்க்கவும் எங்களை மீண்டும் எங்கள் தாயகத்தின் சொந்த இடங்களில் நிம்மதியான வாழ்க்கை வாழ இந்திய அரசு இலங்கையினை எதிர்த்து மனித உரிமைகள் பேரவையில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும், இறந்து போன எங்கள் உறவுகளின் உடல்களுக்கு ஞாயம் வேண்டும், காணமல் போன எங்கள் சொந்தங்களை கண்டு பிடிக்க வழி செய்ய வேண்டும்  என்பதை அவர்களிடம் எங்கள் மீது இரக்கம் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என முன்வைக்கின்றோம்...


நிகழ்வின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள்