Tuesday, June 28, 2011

அகதியாய் நாம் சாதித்தது என்ன....

அலைகளின் இடையே அகதியாய் நாம் இங்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிடப் போகிறது...ஒவ்வோரு ஆண்டு ஆரம்பிக்கும் போதும் இந்த வருடம் எப்படியாவது சரிவருமா... என்ற ஏக்கங்களுக்கு மத்தியில் இனி காத்திருக்கும் மக்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. காரணம்... பிறந்த மண் தெரியாததும் தாய் மண்ணில் பிறக்காததுமான சந்ததி வந்து விட்டது.


முகாம்களிலே நான் உலவுகின்ற போது கவனித்த பல சம்பவங்கள் என்னை ஈழத்தமிழந்தானா என எண்ணிப்பார்க்க செய்கின்றது. அது ஒன்றும் அவர்கள் தவறு இல்லை... பெற்றோர் சொல்லிவைக்காத எம் மண்ணின் பெருமையும் இங்குள்ள சூழ்னிலைகளும் அவர்களை மாற்றி வைத்திருக்கின்றது... நாடு கெட்டு போவதற்கு நாகரீகம் அடையாளம் என கூறிய கண்ணதாசனின் பாடல் என்னில் ஒருகணம் வந்து போனது...


சம்பவங்கள் பல.... ஆனால் அதை பட்டியலிட்டு கூறி என் பல்லைக்குத்தி என் மூக்கில் வைத்து மோர்ந்து பார்க்க விரும்ப வில்லை....காலம் எவ்வாறாயினும் மாறிவிட்டு போகட்டும் நாம் தமிழர் என்பதில் மாறாமல் இருப்போம்... எமது விடிவுக்காய் ... தமிழக சொந்தங்களும்.. நாம் யார் என்று தெரியாவிடினும் மனிதம் என்று வெளி நாட்டவரும் கிளர்ந்தெழுகையில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?.....


நாட்டினை விட்டுவந்த அனைவரும் அந்தந்த நாட்டின் குடிமக்களாய் ஆகிவிட்ட பொழுதும் நாம் மட்டும் இன்னும் அகதிகளாய் இருக்கின்றோம் என்றாவது நாம் நாடு திரும்புவோம் என்று...... திரும்பிக்கொண்டுதான் இருக்கின்றோம் நாள் தோறும்... அட்டை பாஸ்போர்ட் ... வாங்கி கொண்டு... அங்கே சிங்களவன் வீடு கட்ட தகரம் தருகிறானாம் என்று.....


உங்கள் தேசம் உங்களுக்கு மறந்து போய் இருக்கட்டும்... இல்லை நீங்கள் அங்கு பிறக்காதவராய் கூட இருக்கட்டும்... ஒரு நொடியேனும் நினைத்து பாருங்கள் எம் மக்கள் படும் அவலத்தை. வானம் எங்கும் பறந்தாலும் பறவை என்றும் தன் கூட்டில்... உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் என்றும் தாய் நாட்டில்... வாழும் எண்ணம் கொள்ளுங்கள்...


அகதியாய் இதுவரை நாம் சாதித்தது என்ன என சிந்தித்து பாருங்கள்... நாளை........இங்கு வாழ்ந்த தமிழ் அகதிகளின் பெயர்களையும் வரலாற்று சுவட்டில் ஏற்ற வழியைத் தேடுங்கள்... புதிய உலகம் பல வழிகளைக்கற்றுத் தருகிறது நமக்கு நம் இலக்கை அடைய... அதனை எடுத்து கொண்டு எதிரியை வீழ்த்தும் வழிகளைத் தேடுங்கள்....




Sunday, January 9, 2011




நிலைக்குமா இந்த மாற்றம்.

இன்னைக்கு சாயங்காலம் பக்கத்தில இருக்கிற மளிகை கடைக்கு போனேன் பாலும் ,சீனியும் , உருளைக்கிழங்கு வாங்கிட்டு பை கேட்டேன். பாண்டி அன்ன சொன்னார் தம்பிக்கு விஷயம் தெரியாது போல பிளாஷ்டிக் பையெல்லாம் ஒன்னாம் தேதில இருந்து தடைபண்ணிடாங்க. வீட்ல இருந்துஎதாவது கொண்டுவாங்கன்னு.கெஞ்சி கூத்தாடி பழைய பை ஒன்ன வாங்கிட்டன். இந்த பிளாஷ்டிக் தடைய எப்போவே கொன்னு வந்தாச்சுன்னு சொன்னங்க இன்னைக்குதான் எனக்கு தெரிஞ்சிது. உண்மையிலே வரவேற்க பட வேண்டியதுதான் என்னையே நான் நொந்து கொண்டேன் அச்சமயம் கடைக்கு போறேங்கிறது தெரியுது ஏன் பை கொண்டு போகன்னுமுன்னு தோனல எனக்கு.

எவ்வளவு அழிவு இந்த பிளஷ்டிக்கால் இந்த உலகத்தின் தட்ப வெப்பத்தையே மாற்ற கூடிய சக்தியை பெற்றுவிட்டது.இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட தாங்காது என்கிறார்கள் இந்த மனிதர்களின் சாதாரண வாழ்க்கை நிலைக்க இப்பவே இருபது லீட்டர் தண்ணி இருபத்தி ஐந்து ஆகிடுச்சு.நாளைக்கு ஒரு சிலிண்டர் காற்று இருநூறு ரூபாயாவது விற்கும். நம்மாளுங்க இப்பவே சமையல் சிலின்டர பதுக்க ஆரம்பிடுச்சிட்டாங்க. நாளைக்கு காற்று சிலிண்டரும் பதுக்கிட்டாங்க என்னா இந்திரன் படத்துல ரோபோ கார மடக்கி கரண்ட் ஏத்துற மாதிரி நாளைக்கு வீடு வீட திருட வேண்டி வரும்முன்னு. ஆனா இந்த பல்பொருள் அங்காடி எல்லாம் ஒரே பிளாஷ்டிக் பை மயமா இருக்கே. துணிகடையில கர்சிப் வாங்கினா கூட ஒரு பெரிய காரி பேக் கொடுக்கிறாங்களே அத நிறுத்துவாங்களா. ம் இந்த பை இல்லாம இன்னைக்கு எந்த பொருளும் வர்றதில்லையே எண்ணை பாக்கேட்டனாலும் சரி உப்பு,மிளகு, மிளகாய்த்தூள் எல்லாமே பிளஷ்டிக்தான் அதெல்லாம் நிறுத்துவாங்களா. எதையோ செய்யன்னும்முன்னு நெனைக்கிறாங்க ஆனா எப்படி செய்யனும்முன்னு தெரியல்ல.கடையில போனா எல்லாமே பிளஷ்டிக்தான் பை மட்டும் இல்லையாம். சரி என்னத்த சொல்லி என்னத்த செய்ற.... ஸ்ரீ பால் பாக்கேட்ட கொடுன்னு அம்மா கேட்டப்பதான் இந்த க்ளோபல் பிரச்சனையில் இருந்து வெளில வந்து வீட்டுக்குள்ள போனான்.