Wednesday, August 4, 2010




காலத்தை எண்ணிக்கொள்

யாதென்று நாம் சொல்வோம்
தீதென்று தெரிந்தே எம் மீது பகைவர்
கூர் கொண்டு அழித்ததனை.
போர் என்ற மேகம் சூழ்ந்திருந்த போதெல்லாம்
பார் என்று உலகை பதறி நாம் கேட்டோமே
பார்த்தாயா...................

இன்று அனைத்தும் முடிந்து விட்டது
அத்தனையும் இழந்து விட்டோம்
ஊருக்குள் மனிதர் இல்லை
பிணங்கள் தின்ன கூட கழுகுகள் இல்லை
அத்தனையும் எரித்து விட்டான் பகைவன்
என் பந்தங்கள் இருந்த இடமே தெரியாமல்.

உணவின்றி உடையின்றி உட்கார இடம் இன்றி
வெட்டை வெளியில் வெறிச்சோடி நிற்கும் எங்களை மட்டும்
ஏன் விட்டு வைத்தீர்கள்? உங்கள் மானம் கெட்ட வெற்றிக்கு
அடையாளமா நாங்கள் ......
ஏ... உலகத்து நீதி பேசும் அன்பர்களே
எங்கள் மீது மட்டும் ஏன் அதை பார்க்க மறந்தீர்
உங்கள் நா பேச தேவை எங்கள் உத்திரங்களா?
இப்போதே கேட்டு விடுங்கள்
எங்களிடம் அது மட்டும் தான் கொஞ்சமேனும் இருக்கிறது.
அகிம்சை எமது பிறப்பிடம் ஜனநாயகம் என் நாட்டின் இருப்பிடம்
என வாழும் நாடே ....உன் பழி வாங்களுக்கு நாம்தான் கிடைத்தோமா?

உன் தலைவன் செய்த கொடுமைகளை மறுபடியும்
நீ செய்து முடித்து விட்டாய். இதுவரை நீ
நிகழ்த்தியதை மறந்திடாதே ....... காலம்
உனக்காக சில காயங்களை எங்கள் மீது
ஆறாமலே வைத்திருக்கட்டும்.

உதிரங்க்களை உங்கள் வாயால் குடித்து விட்டு
ஊட்ட மருந்து தரும் மூட்டை பூச்சிகள் நீங்கள்.
எங்கள் சொந்தம் எங்கள் உறவு எங்கள் நாடு
என்று வாழ்ந்த எங்களை அழித்து ஏதிலியாய் மாற்றிவிட்டு
பிச்சை போடுகிறாயா எமக்கு.......

உன் பிச்சை தின்று உயிர் வாழும் எண்ணம் இல்லை
எமக்கு – எம்மையும் அழித்து விடு.
உனக்கு உயிர் என்ன பெரிதா – உன் இனம்
என்றால்தான் உயிர் மற்றதெல்லாம் உனக்கு மயி......


தலை பாகை கழட்ட சொன்னான் ஒருவன் என்று
தன மானம் காக்க ஓடினாயே..
உன்னவன் அன்று என் தங்கைகளின் தாவணியை
கழட்ட வந்தான் அவனை நாங்கள்
கொள்ளாமல் விடுவோமடா நா ....

சிங்களத்தை பகடையாக்கி எம் மீது
உன் பழியை தீர்த்து விட்டாய்
அதை எண்ணி நீ நகைக்காதே
காலத்தை எண்ணிக்கொள் அதன் மாற்றம்
உனக்காக பல ரணங்களை கொடுக்க காத்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீதரன்.

No comments:

Post a Comment